குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு உதவும் நகரங்களுக்கான நிதி உதவிகள் குறைக்கப்படும் என அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் அறிவித்துள்ளார். தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி இது குறித்த புதிய சட்டமொன்றை ட்ராம்ப் அறிமுகம் செய்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு சட்ட விலக்களிக்கும் நகரங்களுக்கு மத்திய அரசாங்க நிறுவனங்கள் நிதி உதவிகளை வழங்குவதனை வரையறுத்துக் கொண்டு வேண்டுமென ட்ராம்ப் பணித்துள்ளார்.
மேலும் தன்னுடைய நிர்வாகம் சிறந்த முறையில் கண்காணிப்பு நடைமுறைகளை கடுமையாக்கும் நேரம் வரை, சிரியா அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதையும் டிரம்ப் தடை செய்திருக்கிறார்.
எல்லா அகதிகளின் அனுமதியை நான்கு மாதங்களுக்கு இடைநிறுத்தியும், தீவிர சோதனை மேற்கொள்ள உத்தவிட்டும் குடியேற சாத்தியமாகும் பலர் மீது கடும் நடவடிக்கைகளும் விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் ட்ராம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்த உத்தரவின் ஒரு பகுதி அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புதன்கிழமை ட்ராம்பினால் பிறப்பிக்கப்பட்ட இந்த புதிய சட்டத்திற்கு எதிராக போராடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் ட்ராம்பிற்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக சில தரப்பினர் தெரிவித்துள்ளனர்.