சென்னை மெரினா கடற்கரைக்கு 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மீண்டும் அங்கு ஒன்று கூடுவதாக தெரிவித்து சென்னை பாவல்துறையினர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர். இன்று சனிக்கிழமை நள்ளிரவு முதல் பெப்ரவரி 12ம்திகதி வரை இத்தடை உத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பில் மெரினாவில் பல லட்சக்கணக்கான இளைஞர்கள், கூடி 6 நாட்களாக வரலாறு காணாத யுகப் புரட்சியை நடத்தினர்.
இப்புரட்சியின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததுடன் இப்போராட்டத்தின் முடிவில் காவல்துறையினர் வன்முறையிலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் இளைஞர்கள் மீண்டும் மெரினாவில் ஒன்று கூட உள்ளதாக தெரிவித்து அங் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமுல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பொழுது போக்கு, சுற்றுலாவுக்காக வருவோருக்கு தடை இல்லை எனவும் எனினும் போராட்டம், பேரணி, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும்; காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.