குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களில் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படவில்லை என உலக வங்கி கருத்து வெளியிட்டுள்ளது. அண்மையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் உலக வங்கி கருத்து வெளியிட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உலக வங்கியின் அபிப்பிராயத்தை கோரியிருந்தார்.
இதன் போது மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்களினால் அரசாங்கத்தின் மத்திய வங்கி நட்டம் அடையவில்லை என உலக வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடாத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி விசாரணைக் குழு ஒன்றை நிறுவியுள்ளார்.