குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொது நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார கோரிக்கை விடுத்துள்ளார். திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் எம்.எம்.எஸ். ஹேரத்தை பிரதி தமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக திட்டியுள்ளதாக அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரதேச செயலாளரை , ரஞ்சன் ராமநாயக்க திட்டி அச்சுறுத்திய சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன. பிரதி அமைச்சரின் இந்த செயற்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் ரஞ்சத் மத்தும பண்டார கோரியுள்ளார்.