மலேசியாவிலிருந்து புறப்பட்டு காணாமல் போனதாக கூறப்பட்ட கப்பலில் இருந்த 25 சீன சுற்றுலாப்பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிவிக்கப்பட்டுள்ளது.
28 சீன சுற்றுலாப்பயணிகள் உட்பட 31 பயணிகளுடன் சனிக்கிழமை கிழக்கு மலேசிய மாநிலமான சாபாவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே துறைமுகத்துடனான தொடர்பை இழந்திருந்தது.
இன்னும் 6 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
31 பயணிகளுடன் மலேசியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் காணாமல் போயுள்ளது
Jan 29, 2017 @ 12:48
மலேசியாவிலிருந்து புறப்பட்ட கப்பல் ஒன்று காணாமல் போயுள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. 31 பயணிகளுடன் புறப்பட்ட அந்தக் கப்பலில் 28 பேர் சீன சுற்றுலாப்பயணிகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை கிழக்கு மலேசிய மாநிலமான சாபாவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் புறப்பட்ட சிறுது நேரத்திலேயே துறைமுகத்துடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் மலேசிய செய்திகள் தெரிவிக்கின்றன.
மலேசிய கடற்படையினர் , பொலிஸ் கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் என்பன கப்பலை தேடிக் கொண்டிருப்பமாகவும் அதிக காற்று காரணமாக தேடுதல்பணியில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாகவும மலேஷியா கடல்சார் அமுலாக்க நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.