குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த உண்மைகளை சட்ட மா அதிபர் அம்பலப்படுத்த வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
பிணை முறி மோசடி தொடர்பில் யார் குற்றவாளிகள் என்பது குறித்த அம்பலப்படுத்தப்பட வேண்டியது அவசியமானது என்பதுடன் குற்றவாளிகளை அம்பலப்படுத்தி அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டிய கடப்பாடு சட்ட மா அதிபருக்கு உண்டு என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது எனவும் நாட்டின் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் கீழ் பிணை முறி மோசடி விசாரணை குறித்து அறிந்து கொள்ளும் உரிமை மக்களுக்கு உண்டு எனவும் அக்கட்சி வலியுறுத்தப்பட்டுள்ளது.