இலங்கைக்கு கடத்துவதற்காக ஹெராயின் போதைப்பொருளை பதுக்கி வைத்திருந்தமை தொடர்பில் கைது இருவருக்கு சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2014-ம் ஆண்டு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து பூந்தமல்லியில் உள்ள வீடொன்றினை வீட்டை சோதனை நடத்திய காவல்துறையினர் அந்த வீட்டிலிருந்து 17 கிலோகிராம் போதைப்பொருளை மீட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த நால்வரை கைது செய்து அவர்கள் மீது நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்
இந்த வழக்கு, சென்னையில் உள்ள போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. இதன்போது இருவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர்களை விடுதலை செய்த நீதிமன்றம் ஏனைய இருவருக்கும் 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் அபராதமும் விதித்துள்ளது.