குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எல்லை நிர்ணய அறிக்கை எதிர்வரும் ஒரு மாத காலத்திற்குள் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் என உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றில் அமைச்சரின் சட்டத்தரணி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெபரல் அமைப்பு, உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவில் , உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்படக்கூடிய திகதியை நிர்ணயம் செய்து அறிவிக்குமாறு வலியுறுத்தியிருந்தது.
இந்தநிலையில் ஒரு மாத காலத்திற்குள் எல்லை நிர்ணய அறிக்கை வர்த்தமானியில் பிரசூரிக்கப்படும் என அமைச்சர் பைசர் முஸ்தபாவின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இந்த மனு எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் திகதி நீதிமன்றில் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.