குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹொரணை டயர் உற்பத்திசாலைக்கான காணி 178 மில்லியன் ரூபா குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஹொரணை வெகாவத்தையில் இந்தக் காணி அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலீட்டு ஊக்குவிப்புச் சபை இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அரசாங்க பிரதான மதிப்பீட்டாளரின் மதிப்பீட்டு பெறுமானத்திற்கு அமைய காணி குத்தகைக்கு விடப்பட உள்ளது. 100 ஏக்கர்களைக் கொண்ட இந்தக் காணி 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் வழங்கப்பட உள்ளது.
மேலும் இந்தக் காணி ஏக்கர் ஒன்று 100 ரூபா என்ற அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளியிட்ட தகவல் பிழையானது எனவும் தெரிவித்துள்ள முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் தலைவர் உபுல் ஜயசூரிய இந்தக் காணிக்கான உடன்படிக்கை இன்னமும் முதலீட்டாளருடன் கைச்சாத்திடப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.