Home உலகம் அமெரிக்காவின் பதில் சட்டமா அதிபர் பதவிநீக்கம்

அமெரிக்காவின் பதில் சட்டமா அதிபர் பதவிநீக்கம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகள்

WASHINGTON, DC – JUNE 28: Deputy Attorney General Sally Q. Yates speaks during a press conference at the Department of Justice on June 28, 2016 in Washington, DC. Volkswagen has agreed to nearly $15 billion in a settlement over emissions cheating on its diesel vehicles. (Photo by Pete Marovich/Getty Images)

அமெரிக்க அரசாங்கத்தின் பதில் சட்டமா அதிபராக கடமையாற்றி வந்த சாலி யேட்ஸை (Sally Yates ), அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்ட சாலி யேட்ஸ், ட்ரம்பினால் குடியேற்றம் தொடர்பில் விதிக்கப்பட்ட தடை குறித்து கேள்வியெழுப்பியமையைத் தொடர்ந்தே,   இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரம்பின் 7 நாடுகள் மீதான தடை உத்தரவு பலரை அதிருப்தியடையச் செய்துள்ள நிலையில், சாலி யேட்ஸ் குறித்த தடையின் சட்டபூர்வத் தன்மை தொடர்பில்   கேள்வியெழுப்பியதனாலேயே   அவர்  பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
இந்த நிலையில்   சாலிஸ்இஸ, அமெரிக்க சட்டத்துறைக்கு துரோகம் செய்துவிட்டார் என  வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More