குளோபல் தமிழ்ச் செய்திகள்
போதைப் பொருளுக்கு எதிhன நடவடிக்கைகளை பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் இடைநிறுத்திக் கொண்டுள்ளனர். போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினை கலைப்பதாக தேசிய காவல்துறை பிரிவின் பணிப்பாளர் நாயகம் றொனால்ட் டெலா றோசா ( Ronald dela Rosa)தெரிவித்துள்ளார்.
காவல்துறை பிரிவில் காணப்படும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் காவல்துறை திணைக்களத்தை தூய்மைப்படுத்த வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளார்.
பிலிப்பைன்ஸ் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் இதுவரையில் ஆறாயிரம் பேர் கொல்லபபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.