171
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் லத்தூரில் உள்ள எண்ணெய்த் தொழிற்சாலை ஒன்றில் நேற்று விசவாயு பரவியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். கொள்கலன் ஒன்றை சுத்தம் செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த வேளை , திடீரென விசவாயு கசிந்து பரவியதால் விசவாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்ட நிலையில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஒருவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
Spread the love