சிலியின் தெற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் ஏற்பட்ட பயங்கர காட்டு தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகளும் தீயினால் அழிந்துள்ளன. அத்துடன் 10 லட்சம் ஏக்கர் காடும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல நாட்களாக எரிந்து வரும் தீயை அணைக்க அந்நாட்டு அரசு எடுத்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்குப் பயன் அளிக்காததனையடுத்து , பிரான்ஸ், அமெரிக்கா, பெரு உள்ளிட்ட நாடுகளிடம் உதவி கேட்கப்பட்டுள்ளது.
இதேவேளை பல இடங்களில் சிலர் வேண்டுமென்றே தீ வைத்ததாக தெரிவிக்கப்படும் நிலையில் இத்தகவல்கள் உண்மையென்றால், குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி மிஷல் பேச்சல் அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.