196
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்குமாறு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ரவீந்திர விஜேகுணவர்தனவுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ரவீந்திர விஜேகுணவர்தன தற்போது வெளிநாடு சென்றுள்ளமையால், நாடு திரும்பியதும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி விளக்கமளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love