முல்லைத்தீவு அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதி கட்டுமானங்கள் சேதமடைந்த நிலையில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது
துணுக்காயில் இருந்து அக்கராயன் செல்லும் வீதியில் உயிரலங்குளம் அணைக்கட்டு வீதி வழியாகவும் அம்பலப்பெருமாள் குளத்தின் வான் வழியாகவும் வாகனங்கள் பயணிப்பதன் காரணமாக குளத்தின் அணைக்கட்டுகள் வான் பகுதிகள் சேதமடைகின்றன.
இது குறித்து விவசாயிகளினால் துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெறும் கூட்டங்களில் தெரிவிக்கப்பட்டு வந்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனினும் கிராமங்கள் உருவாக்கப்படும் போது போக்குவரத்திற்கு என அமைக்கப்பட்ட வீதிகள் புனரமைக்கப்படாதன் காரணமாக விவசாயிகள் பயன்படுத்திய வீதிகள் முதன்மை போக்குவரத்து வீதிகளாக மாறியதன் காரணமாக சுமைகளுடன் வரும் கனகரக வாகனங்களினால் குளத்தின் வான்பகுதி அணைக்கட்டு என்பன சேதமடைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால்கு ளத்தின் நீர் மழை காலங்களில் வீண்விரயமாகச் செல்கின்ற நிலைமை காணப்படுகின்றது. எனவே அம்பலப்பெருமாள் குளத்தின் கீழ் ஐந்நூறு வரையான ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படும் நிலையில் குளத்தின் வான்பகுதியினைப் புனரமைத்துத் தருமாறு இக்கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.