குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ரஸ்யாவில் 7 விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊக்க மருந்து வகைகளை பயன்படுத்தியமை தொடர்பில் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வீர வீராங்கனைகள், தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து வகைகளை பயன்படுத்தியதாக ரஸ்ய ஊக்கமருந்துப் பயன்பாட்டை தடுக்கும் முகவர் நிறுவனமான ருசாடா ( Rusada )அறிவித்துள்ளது.
மல்யுத்தம், Bobsleigh , ரோவிங், பலு தூக்கல், மெய்வல்லுன வீர வீராங்கனைகளே இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களாவர். ஒவ்வொரு வீரருக்கும் குறித்த கால எல்லைகள் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலருக்கு நான்கு ஆண்டுகள் வரையிலும் சிலருக்கு ஒரு ஆண்டும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.