குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
க்ரோட்டன் இலைகளை மருந்தாக பயன்படுத்தக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருந்தாக்கல் மற்றும் நச்சியல் பிரிவின் பீடாதிபதி வைத்தியர் சன்ன ஜெயசுமன இதனைத் தெரிவித்துள்ளார்.
அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்ற க்ரோட்டன் எனப்படும் செடிவகைகளை மருந்துக்காக உட்கொள்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார். சீன வைத்திய முறைப்படி வயிற்றோட்டத்தைக் குணப்படுத்த க்ரோட்டன்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இதில் காணப்படும் ஒருவகையான எண்ணெய் திரவம், மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விசத்தன்மைக் கொண்டது எனவும், எனவே அதனை உட்கொள்ள வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.