குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை தேராவாத பௌத்த மதத்தின் கேந்திர நிலையமாக உருவாக்குவதற்கான அனைத்து பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பௌத்த பிக்குகள் குழுவினருடன் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஞாயிறு பௌத்த பாடசாலை கல்விக்கான பாடத்திட்டங்களை விரிவுபடுத்தி அதனை பலப்படுத்துவது முக்கியம் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரிவெனா கல்வியை முன்னேற்றம் செய்வதற்காக ஜனாதிபதி முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பிக்குகள் இதன்போது மகிழ்ச்சி வெளியிட்டுள்ளனர். விகாரைகளை அடிப்படையாகக் கொண்டு நிலையான அபிவிருத்திக்கான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.