குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் ஒருங்கிணையக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சரணடைந்த 12, 000 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் தொடர்பிலும் தமது அரசாங்கம் தொடர்ச்சியாக புலனாய்வு கண்காணிப்பு நடத்தி வந்தது என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய அரசாங்கம் புலானாய்வு விவகாரங்களில் நெகிழ்வு போக்கினை பின்பற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனின் உயிருக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் அச்சுறுத்தலுக்கு அவரே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ இராணுவ முகாம்கள் அகற்றப்படாமைக்கு புலிகள் மீளவும் ஒருங்கியைக் கூடாது என்பதே காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அநுராதபுரத்தில் நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.