குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர் பொது மன்னிப்பு கோர வேண்டுமென சமூக வலுவூட்டல் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான மண் அகழ்விற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமை குறித்து பிரதேச செயலாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சுமத்தியுள்ள அவர் இதற்காக பிரதேச செயலாளர் பொது மன்னிப்பு கோர வேண்டுமென கோரியுள்ளார்.
இந்தப் பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வோர் மாபீயா ஒன்றை உருவாக்கியுள்ளதாகவும் இந்த மாபீயா மோதல்களினால் 48 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து அரச அதிகாரிகள் கவனம் செலுத்தாமை துரதிஸ்டவசமானது எனவும் பிரதேச செயலாளரின் மூக்கில் குத்துவதாக தாம் கூறவில்லை எனவும், மூக்கில் எவரேனும் குத்த வந்தால் எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக நடவடிக்கை எடுப்பீர்களா அல்லது அனிச்சையாக செயற்படுவீர்களா என கேள்வி எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.