குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காணாமல் போனதாக கூறப்பட்ட தொழிற்சங்கத் தலைவர் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா ரெலிகொம் மேன்பவர் தொழிற் சங்கத்தின் துணைத் தலைவராக கடமையாற்றி வரும் எம்.எஸ் மங்கள என்பவரே இவ்வாறு அண்மையில் காணாமல் போயிருந்தார்.
குறித்த நபரை காணவில்லை என காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. பன்னிப்பிட்டியவில் அமைந்துள்ள வீட்டிற்கு திரும்பிய போது தொழிற்சங்கத் தலைவர் இவ்வாறு காணாமல் போனார் என தெரிவிக்கப்பட்டது.
இங்கிரிய பகுதியில் வைத்து குறித்த தொழிற்சங்கத் தலைவர் வான் ஒன்றில் வரவழைக்கப்பட்டு விடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அவர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.