151
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்திய வரவு செலவுத் திட்டத்தில் இலங்கைக்காக 125 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சிற்கு அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 14,798 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டை விடவும் இந்திய வெளிவிவகார அமைச்சிற்கு 135 கோடி ரூபா கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love