குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடியினால் நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆயிரம் பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாவதாகவும் 2008ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் 2136 சந்தர்ப்பங்களில் பிணை முறிகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களைத் தவிர்ந்த வேறு நாட்களில் இலங்கையில் பிணை முறி கொடுக்கல் வாங்கல்களினால் மோசடிகள் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மோசடி குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவியுள்ளதாகவும், மோசடி பற்றி விளக்கம் அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டால் கூட்டு எதிர்க்கட்சி இது குறித்து தெளிவுபடுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.