குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக நீதவான் ஒருவர் பணி நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிவில் அமைப்பு ஒன்றினால் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை அடுத்து நீதவான் அசாங்க திஸாநாயக்க பணி நீக்கப்பட்டுள்ளார்.
மனித உரிமை நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் இது தொடர்பில் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவி;டம் முறைப்பாடு செய்துள்ளார்.
நீதவான் அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. நீதவான் விண்ணப்பம் ஒன்றில் போலியான முகவரியை இட்டிருந்தார் எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவை பணி நீக்குவதற்கான அரசியல் சதி வேலைகளில் திஸாநாயக்க பங்களிப்பினை வழங்கியிருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. முகநூலில் அரசியல் கருத்துக்களை பதிவிடுவதாகவும் நீதவான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதன் அடிப்படையில் நீதவான் திஸாநாயக்க பணி நீக்கப்பட்டுள்ளார்.