சீனா புதிய ரக ஏவுகணை சோதனையை மேற்கொண்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தென் சீனக்கடலில் சீனா செயற்கை தீவுகளை அமைத்துள்ளதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில்; முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
இந்நிலையில் கடந்த மாதம் சீனா 10 அணு ஆயுதங்களை சுமந்து சென்று பல்வேறு இலக்குகளில் தாக்குதல் நடத்தும் டிஎப் -5சி ஏவுகணை சோதனையை மேற்கொண்டு உள்ளது எனவும் அதனை அமெரிக்க உளவுத்துறை தீவிரமாக கண்காணித்ததாகவும் அமெரிக்க நாளிதழ் செய்தி வெளியிட்டு உள்ளது.
சீனாவின் ஷாங்ஷி மாகாணத்தில் வைத்து 10 அணு ஆயுதம் போன்ற மாதிரிகளை கொண்டு சோதனை நடத்தப்பட்டு உள்ளது எனவும் சீனாவின் மேற்கு பகுதியில் உள்ள பாலை வனப்பகுதியை நோக்கி ஏவுகணையானது சென்றது எனவும் அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டு உள்ளது.