குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கைத் தமிழருக்கு கனடாவில் பிணை வழங்கப்பட்டுள்ளது. சுமார் ஆண்டுகள் வழக்கு விசாரணைகளின் பின்னர் இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த இலங்கைத் தமிழர், சர்ச்சைக்குரிய சன் சீ கப்பலின் ஊடாக கனடாவிற்கு சட்டவிரோதமாக ஆட்களை கடத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குணா ரொபின்சன் கிறிஸ்துராஜா என்பவருக்கே இவ்வாறு பிணை வழங்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத ஆட்கடத்தல் தொடர்பில் புதிதாக வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில் சந்தேக நபர் தொடர்ந்தும் விளக்க மறியலில் இருக்க வேண்டிய அவசியமில்லை என நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2010ம் ஆண்டு தாய்லாந்திலிருந்து சட்டவிரோதமான முறையில் 492 தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் கனடாவை சென்றடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டவிரோத ஆட்கடத்தல் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட ஏனைய மூன்று பேரையும் குற்றமற்றவர்கள் என ஜூரிகள் சபை அறிவித்துள்ளது. கணவர் பிணையில் விடுவிக்கப்பட்டமை சொல்ல முடியாத மகிழ்ச்சியை அளித்திருக்கின்றது என கிறிஸ்துராஜாவின் மனைவி பெட்ரீசியா தெரிவித்துள்ளார்.