குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஈரான் அணுவாயுத ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளதாக ஜெர்மனிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. Sumar என்ற ஏவுகணையே இவ்வாறு பரீட்சிக்கப்பட்டுள்ளது எனவும் இந்த ஏவுகணையில் அணுவாயுதங்களையும் பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
முதலாவது பரிசோதனையின் போதே இந்த ஏவுகணை 600 கிலோ மீற்றர் தொலைவு வரை சென்று தாக்கியதாகவும், இதில் அணுவாயுதங்களை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஏவுகணை சுமார் 2000 முதல் 3000 கிலோ மீற்றர் தூரம் வரையிலும் சென்று தாக்குதல் நடத்தக் கூடியது எனவும் இந்த புதிய வகை ஏவுகணைகள் ராடார்களில் தென்படாது எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கக்கூடியவை என ஜெர்மன் பத்திரிகை தெரிவித்துள்ளது.
இந்த செய்தி குறித்து ஜெர்மனிய புலனாய்வுப் பிரிவோ அல்லது ஈரானோ எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.