குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தென் ஆபிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டேவிட் மில்லர் உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இறுதியாக நடைபெற்ற மூன்று ஓரு நாள் போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மில்லர் சதம் அடித்திருந்தார்.
இலங்கை அணிக்கு எதிராக டேர்பனில் அண்மையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போது மில்லரது விரல் உபாதைக்குள்ளானது. பிடியெடுப்பு ஒன்றை எடுத்த போது விரல் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் , இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய போட்டித் தொடரில் மில்லர் விளையாட மாட்டார் எனவும் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வரையில் மில்லர் ஓய்வு எடுத்துக் கொள்ள நேரிடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.