162
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
வீசா இன்றி இலங்கையில் தங்கியிருந்த உக்ரேய்ன் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்றுக்கொள்ளப்பட்ட வீசா இன்றி நாட்டில் தங்கியிருந்தார் என உக்ரேய்ன் பிரஜை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயாகல மலேகொட சந்தியில் வைத்து உக்ரேய்ன் பிரஜையை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கடவுச்சீட்டு இருந்த போதிலும் இலங்கையில் தங்கியிருப்பதற்கான வீசா அனுமதிப்பத்திரம் குறித்த நபரிடம் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
26 வயதான குறித்த பிரஜை களுத்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தடுப்புக் காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love