இந்திய ஜனாதிபதி மாளிகையில் உள்ள கணக்குப்பிரிவு அலுவலகத்தில் இன்று திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை கட்டுப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ மாளிகையான ராஷ்டிரப்பதி பவனில் இன்று காலை 8.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவலறிந்து 6 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர் எனவும் இந்திய செய்திகள் தெரிவித்துள்ளன
இந்த தீ விபத்து கணக்குப்பிரிவு அலவலக அறையில் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் அந்த அறையில் இருந்த இன்வெர்ட்டர், நாற்காலி மற்றும் மேசை என்பன சேதமடைந்துள்ளதாகவும் மின்கசிவு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.