குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபாலா சிறிசேனவும் பொறுப்பு சொல்ல வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கோப் குழு அறிக்கை ஒன்றை அப்போதைய கோப்குழு தலைவர் டியூ.குணசேகர சமர்ப்பிக்க முயற்சித்தார் எனவும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திடீரென பாராளுமன்றை கலைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ள அவர் கள்வர்களை பாதுகாக்கும் நோக்கில் ஜனாதிபதி இவ்வாறு பாராளுமன்றை கலைத்திருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, இந்த மத்திய வங்கி பிணை முறி மோசடி விசாரணைகளில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவும் ஓர் பிரதிவாதியாவார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்து கூட்டு எதிர்க்கட்சியே முதலில் எதிர்ப்பை வெளியிட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.