குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணங்கியுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்ய இதுவே சரியான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சில அமைச்சர்கள் தங்களது அமைச்சுக்களிலிருந்து மாற்றப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையில் மாற்றம் செய்வது பாதிப்பினை ஏற்படுத்தாது எனவும் அதனையிட்டு அமைச்சர்கள் பதற்றமடையக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.