164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கையின் 69 ஆவது சுதந்திர தின கொண்டாட்டங்கள் யாழ்.மாவட்ட செயலகத்தில் கொண்டாடப்பட்டன.
வீதித்தடை.
மாவட்ட செயகலத்தில் நடைபெற்ற சுதந்திர தினக்கொண்டாட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக மாவட்ட செயலகத்தை சூழ உள்ள வீதிகள் அனைத்து போக்குவரத்துக்கு தடை விதித்து , காவல்துறையினர் வீதி தடைகளை போட்டு இருந்தனர்.
முப்படைகள் மற்றும் காவல்துறை அணிவகுப்பு.
காலை 9 மணியளவில் முப்படைகள் மற்றும் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்று தேசிய கொடியினை யாழ்.மாவட்ட செயலாளர் நாகலிங்கன் வேதநாயகம் ஏற்றி வைத்தார்.
பொதுமக்கள் நிகழ்வில் கலந்து கொள்ள தடை.
யாழில் நடைபெற்ற இந்த சுதந்திர விழா நிகழ்வில் பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு காவல்துறையினர் அனுமதிக்காத நிலையில் , மாவட்ட செயலக உத்தியோகஸ்தர்கள் மாத்திரமே சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Spread the love