தமிழக அரசு, பேரறிவாளன் மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றில் எதிர்வரும் 7ம் திகதி தலைமை நீதிபதிகள் அடங்கிய அரசியல்சாசன அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
இதை எதிர்த்த வழக்கில் அரசியல்சாசன அமர்வு, சி.பி.ஐ. விசாரணை மேற்கொண்ட வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை மாநில அரசு விடுதலை செய்யமுடியாது. மத்திய அரசின் ஒப்புதலை பெற்றே விடுவிக்க முடியும் என்று தீர்ப்பு வழங்கியது.
மத்திய அரசின் ஒப்புதலை மாநில அரசு பெறவேண்டும் என்ற அம்சத்தை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசு சார்பிலும், பேரறிவாளன் சார்பிலும் உச்சநீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்ச நீதிமன்றில் எதிர்வரும் 7ம் அரசியல்சாசன அமர்வு முன் விசாரணைக்கு வருகிறது.