குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கடற்தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து ஒன்று கூடல் நடைபெறவுள்ளதாகவும் அதனை தடைசெய்ய கோரியும் காவல் துறையினர் நீதிமன்ற தடை உத்தரவை வாங்கி வந்திருந்தனர்.
சுதந்திர தினமான இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தின் அருகில் வடமாகாண சபை உறுப்பினர் எம்,கே,சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் கடற்தொழிலாளர் பிரச்சனைகள் தொடர்பிலான ஒன்று கூடல் ஒன்றினை நடாத்த உள்ளதாகவும் அதற்காக கண்டி வீதியினை மறித்து யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக கூடவுள்ளதாக காவல்துறையினர் யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதிஸ்தரனின் கவனத்திற்கு கொண்டு சென்று நீதிமன்ற தடையுத்தரவை வாங்கி வந்தனர்.
ஆனால் இன்றைய தினம் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் காணமால் ஆக்கப்பட்டவர்களின் தகவல்களை வெளியிடு , தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் , காணிகளை விடுவி போன்ற கோரிக்கைகளை முன் வைத்தே போராட்டம் நடாத்தினர்.
அதனால் சிவாஜிலிங்கம் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோர் இது கடற்தொழிலாளர்கள் பிரச்சனைகள் தொடர்பிலான ஒன்று கூடலுக்கும் கண்டி வீதியினை மறித்து யாழ்.மாவட்ட செயலகத்தின் முன் கூடுவதற்கும் தான் நீதிமன்று தடை விதித்து உள்ளது. ஆகவே எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என கூறி போராட்டத்தை முன்னெடுத்தனர்.