சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்படுவதாக, காவல் துறை ஆணையர் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதை வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் கடந்த மாதம் 18-ம் திகதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எனினும் இறுதி நாளில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களினை அடுத்து மெரினாவில் 44 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மெரினாவிற்கு நுழைய அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததுடன் மெரினா கடற்கரை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், சென்னை மெரினாவில் பிறப்பிக்கப்பட்டிருந்த 144 தடை உத்தரவு திரும்ப பெறப்பட்டுள்ளது. நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதால் தடை உத்தரவு திரும்ப பெறப்படுவதாக சென்னை காவல் துறை ஆணையர் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
எனினும் சென்னை மாநகர் காவல் சட்டப்பிரிவு 41-ன் படி மக்கள் அனுமதியின்றி கூடுவதற்கான, போராட்டங்கள் நடத்துவதற்கான தடை தொடர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.