குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்ப்பாணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை சுற்றி மனித சங்கிலிப் போராட்டமொன்று நடத்தப்படும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ நோக்கங்களுக்காக யாழ்ப்பாணத்தின் அதிகளவு காணிகள் மீட்கப்படுவதற்கு இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் வட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஆகியோர் பங்கேற்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கில் காணிகளை சுவீகரிப்பது குறித்து யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் எதிர்வரும் வியாழக்கிழமை கூட்டமொன்று நடத்தப்பட உள்ளதாகவும் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் புதிய இராணுவ முகாம்களை அமைப்பதற்காக சுமார் 1600 ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் விமானப்;படை, இராணுவம் மற்றும் காவல்துறையினர் இந்தக் காணிகளை பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.