204
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எகிப்து குண்டுத் தாக்குதல் நடத்தியதாக தென் சூடான் கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் நிலைகள் மீது எகிப்து விமானப்படையினர் குண்டுத் தாக்குதல் நடத்தியதாக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென் சூடானின காகா என்ற நகரிற்கு அருகாமையில் ஒன்பது குண்டுகள் போடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்தக் குற்றச்சாட்டை எகிப்து நிராகரித்துள்ளது.
நாடுகளின் உள்விவகாரங்களில் எகிப்து தலையீடு செய்யாது என அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் அகமட் அபு செய்யிட் ( Ahmed Abu Zeid தெரிவித்துள்ளார்.
Spread the love