குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் நீதித்துறையை அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார். அண்மைய நாட்களாக நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் அந்நாட்டு நீதித்துறைக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாடுகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு ஏதேனும் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு அமெரிக்க நீதித்துறையே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஏழு நாடுகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு டொனால்ட் ட்ரம்ப் வித்திருந்த தடை சட்டத்திற்கு முரணானது என தெரிவித்து அந்த நாட்டு நீதிமன்றங்கள் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்தன.
இந்த நிலையில், நீதித்துறையின் தீர்ப்பை தம்மால் நிராகரிக்க முடியாது என குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், குறித்த 7 நாடுகளைச் சேர்ந்தவர்களை கடுமையாக சோதனைகளுக்கு பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் மீது அக்கறை கொண்டும், பாதுகாப்பு நலன் கருதியுமே தான் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும், நாட்டுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நீதித்துறையே அதனை பொறுப்பேற்க வேண்டும் எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.