குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சீனாவிடமிருந்து முதலீடுகள் தேவை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்யுமாறு சீனாவிற்கு அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இலங்கை முதலீட்டாளர்களை சீனாவிற்கு அனுப்பியதாகவும் தற்போது சீன முதலீட்டாளர்கள் இலங்கை வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா கடந்த காலங்களில் முதலீட்டாளர்களை அழைத்து பல்வேறு சலுகைகளை வழங்கியதாகவும் அதன் ஊடாக அந்த நாடு பாரிய அபிவிருத்தியை அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியதன் ஊடாக இந்தியாவும் வியட்னாமும் அபிவிருத்தி அடைந்தன என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் எதிர்க்கட்சியின் சிலர் கேள்வி எழுப்பி வருவதாகவும் இவ்வாறான முதலீடுகள் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் என தெரிவித்துள்ள பிரதமர் ஏற்றுமதியை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.