குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான போராட்டங்களுக்கு ஆதரவளிக்கப்படும் என ஜே.வி.பி கட்சி அறிவித்துள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளையும் ஆதரிப்பதாக கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற சந்திப்பில் மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் பட்டம் , சட்ட ரீதியானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.
இதற்கமைய மாலபே தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக செயற்படுவதற்காக தாம் இணக்கப்பாடொன்றுக்கு வந்துள்ளதாக அநுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.