குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குத்துச் சண்டை வீரர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்களை தவிர்க்க புதிய கருவியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. மைல் டொவல் என்ற குத்துச் சண்டை வீரர் எதிர்த்தரப்பு வீரர் நடத்திய தாக்குதலில் காயமடைந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று நிக் பிளக்வெல் குத்துசண்டை போட்டியொன்றில் பங்கேற்று படுகாயமடைந்திருந்தார். குத்துச் சண்டை போட்டியின் போது தலையின் குறிப்பாக மூளைப் பகுதியில் ஏற்படும் இரத்த கசிவுகளே இவ்வாறு உயிரிழப்புக்களுக்கான காரணங்கள் என தெரிவிக்கப்படுகிறது.
மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதா என்தபனை அறிவதற்கு மருத்துவ மனைக்கு செல்லாது போட்டி நடைபெறும் இடத்திலேயே பரிசோதனை செய்யக்கூடிய வகையில் கருவியொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.