குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக கொரியாவிற்கான இலங்கை தூதுவர் மனிசா குணசேகர தெரிவித்துள்ளார். நிலையான சமாதானத்தை வெளிப்படைத்தன்மையுடன் ஏற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக 69ம் தேசிய சுதந்திர தின நிகழ்வுகளில் பங்கேற்ற போது அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் கொரியாவிற்கும் இடையில் சுமார் நாற்பது ஆண்டுகளாக உறவுகள் நீடித்து வருவதாகவும் சுதந்திரத்தின் பின்னர் மூன்று தசாப்த யுத்தம் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாடு எதிர்நோக்கியது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் வெற்றிகரமாக பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகவும் அது பெருமிதம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து இன மக்களுக்கும் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.