குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் மரியாதையாக பேச கற்றுக்கொள்ள வேண்டுமென சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கும் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் பாராளுமன்றில் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தை அடுத்து இந்த விடயத்தை சபாநாயகர் அறிவித்துள்ளார்.
அண்மையில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரை பிரதி அமைச்சர் ரஞ்சன் எச்சரித்தமை தொடர்பில் இவ்வாறு வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது. பாராளுமன்றில் கெட்டவார்த்தைகளினால் பிரதி அமைச்சரும் கூட்டு எதிர்க்கட்சியினரும் திட்டிக் கொண்டதனைத் தொடர்ந்து சபாநாயகர் இதனைத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றின் ஹன்சார்டிலிருந்து சில வார்த்தைகளை நீக்கிவிடுமாறு சபாநாயகர் மேலும் கூறியுள்ளார்.