இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெறுவது அவசியம் என்ற தீர்ப்பை மறு சீராய்வு செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளன பேரறிவாளன், சாந்தன், நளினி, முருகன், ரவிச்சந்திரன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகியோரை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததனையடுத்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்று கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சீராய்வு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அதனை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது