161
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை கடுமையாக்க வேண்டும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகழ்வு திணைக்கள அதிகாரிகளை இன்றைய தினம் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளதனால் அடிப்படைவாதிகள் கடும்போக்காளர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதாகத் தெரிவித்துள்ள அவர் உலகின் பல நாடுகளின் குடிவரவு குடியகழ்வுச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருவதாகவும் கடும்போக்காளர்கள், அடிப்படைவாதிகளுக்கு இடமளிக்கப்படக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love