160
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஆட்சியில் இருந்த காலத்தில் 196 ஆலோசகர்களை கடமையில் அமர்த்தியிருந்தார் என ராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்காக 90 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தது என தெரிவித்துள்ள அவர் எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு நான்கு ஆலோசகர்களே இருக்கின்றார்கள் எனவும் மிகவும் குறைந்தளவான பணியாளர்களையே தற்போதைய ஜனாதிபதி கடமையில் அமர்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Spread the love