குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கையுடன் இணைந்து செயற்படத் தயார் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் (Xi Jinping )தெரிவித்துள்ளார். அரசியல் மற்றம் பரஸ்பர நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீன ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகள் இரு தரப்பிற்கும் நன்மைகளை அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு அறுபது ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை தொடர்ச்சியாக சீனாவிற்கு அளித்து வரும் ஒத்துழைப்பு வரவேற்கப்பட வேண்டியது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.