குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் இலங்கை பேணிய உறவுகள் பிழையாக புரிந்து கொள்ளப்பட்டது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் பேணி வரும் உறவுகள் குறித்து இந்தியா மௌனம் காத்து வருகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார். தமது தந்தையான மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி நடத்திய காலத்தில் இலங்கையை எந்தவொரு நாடும் வேறு ஒரு நாட்டுக்கு எதிராக பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு இந்தியாவிற்கே முதலில் வழங்கப்பட்டது எனவும் அதனை இந்தியா ஏற்க கால தாமதம் செய்த காரணத்தினால் சீனாவிற்கு அந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ள நாமல் மக்களின் நலனை முதனிலைப்படுத்தியே மஹிந்த அரசாங்கம் ஆட்சி நடத்தியது என குறிப்பிட்டுள்ளார்.