அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பை விடவும் தமது தந்தை செல்வந்தர் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது தந்தை டொனால்ட் ட்ராம்பை விடவும் செல்வந்தர் என இந்த அரசாங்கம் கூறி வருவதாகவும், தந்தையின் கணக்கில் 18 பில்லியன் டொலர்கள் காணப்படுவதாக கூறி வந்த அரசாங்கம் தற்போது அந்த தொகையை ஒரு பில்லியனாக குறைத்துக் கொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த இரண்டாண்டு காலப்பகுதியில் தாம் அதிகளவில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவில் காலத்தை கடக்க நேரிட்டது என அவர் குறிப்பிட்டுள்ள அவர், கைது செய்யப்பட்ட காலத்திலும் அதன் பின்னர் ஏனையவர்கள் கைது செய்யப்பட்ட போது பார்வையிடவும் என நீண்ட காலத்தை தாம் நிதக் குற்றவியல் விசாரணைப் பிரிவிலும் சிறைகளிலும் கடத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.